வாஷிங்டன், பிப்.12: பிரதமர் மோடி எனது நண்பர், நல்லவர் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்

வருகிற 24, 25 ஆகிய தேதிகளில் இந்தியா சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருப்பது குறித்து அதிபர் டிரம்ப் கூறுகையில், எனது இந்தியப் பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன் என்றார்.
இந்தியா, அமெரிக்கா இடையிலான சில வர்த்தக ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட வாய்ப்புள்ளது. அவை சரியாக அமைந்தால் நிச்சயம் நீங்கள் எதிர்பார்த்து நிறைவேறும்.

குறிப்பாக ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் 5 முதல் 7 மில்லியன் மக்கள் பங்கேற்பார்கள் என பிரதமர் மோடி என்னிடம் தெரிவித்தார். அவர்கள் அனைவரையும் சந்திக்க நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்று தெரிவித்தார்.