சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இப்படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இதில் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும், மோகன் பாபு, ஜாக்கி ஷெராப், கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சூரரைப் போற்று படம் விமானத்தை மையப்படுத்திய கதை என்பதால், இசை வெளியீட்டையும் இதுவரை இல்லாத வகையில் புதுவிதமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானத்தில் பயணித்தவாறு இசை வெளியீட்டு விழாவை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.