தில்லுக்கு துட்டு 2’, ஏ1, படங்களை தொடர்ந்து நடிகர் சந்தானம் நடிப்பில் அடுத்ததாக ‘சர்வர் சுந்தரம்’ படம் ரிலீசாக இருக்கிறது. இதில் வைபவி சாண்டில்யா கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தை ஆனந்த் பால்கி இயக்கி உள்ளார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, பி.கே.வர்மா ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். தினேஷ் பொன்ராஜ் எடிட்டிங் செய்ய, ராஜேஷ் கலையமைக்கிறார். கென்யா பிலிம்ஸ் மிராக்கல் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளது. இப்படம் கடந்த ஜனவரி 31-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சந்தானம் நடிப்பில் உருவான டகால்டி படம் அதே தேதியில் வந்ததால் பிப்.14-க்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. தற்போது அந்த தேதியும் மாற்றப்பட்டு வரும் 21-ல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.