பிரபல நடிகை கேத்திரினா தெரேசா தமிழில் கார்த்தி, விஷ்ணுவிசால், தனுஷ், ஜீவா போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தற்போது கோலிவுட்டில் இருந்து டோலிவுட்டிற்கு சென்றுள்ளார்.

பிரபல தெலுங்கு இயக்குனர் கிராந்தி மாதவ் இயக்கத்தில் நாளை மறுநாள் வெளியாக உள்ள வேல்டு பேமஸ் லவ் ஸ்டோரி படத்தில் விஜய் தேவாரகொண்டாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தில் அவருடன் ஐஸ்வர்யா ரஜேஷ், ராக்ஷிகண்ணா, இசபெல்லா போன்ற நடிகைகளும் நடித்துள்ளனர்.
இந்த படம் குறித்து கேத்திரினா கூறுகையில், வேல்டு பேமஸ் லவ் ஸ்டோரி படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இயக்குனர் கிராந்தி மாதவிடம் இந்த படத்திற்காக நான் ஏதாவது மாற்றம் செய்து கொள்ள வேண்டுமா என்று கேட்டேன். ஆனால் அவர் நீங்கள் நேரச்சுரலாக நடித்தால் மட்டும் போதும் என்றார். படம் நன்றாக வந்துள்ளது. ரசிகர்களைப்போல் நானும் படத்தை பார்க்க ஆவலாக உள்ளேன் என்றார்.

இந்த படத்தை தொடர்ந்து மற்றொரு தெலுங்கு இயக்குனர் போயப்பட்டி சீனு இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தில் கேத்திரி ஹீரோயினாக நடிப்பார் என சொல்லப்படுகிறது.