ஒரு நாள் இரவில் நடக்கும் கதை ‘மாயத்திரை’

சினிமா

ஸ்ரீ சங்கர நாராயணா சாமுண்டேஸ்வரி மூவிஸ் சார்பில் காஸ்ட்யூமர் ப.சாய் தயாரிக்கும் படம் ‘மாயத்திரை’. இந்த படத்தில் பிடிச்சிருக்கு, ‘முருகா,கோழி கூவுது படங்களில் ஹீரோவாக நடித்த அசோக் குமார் நாயகனாக நடிக்கிறார். டூலெட், திரௌபதி படங்களின் ஹீரோயிள் ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாக நடிக்கிறார். மற்றொரு நாயகியாக சாந்தினி தமிழரசன் மற்றும் மேகாலி நடிக்கிறார்கள். படத்திற்கு எஸ்.என்.அருணகிரி இசைமைக்க, இளையராஜா ஒளிப்பதிவு செய்கிறார்.

தோட்டா தரணி கலை இயக்கம் செய்ய, பிரதீப் தினேஷ் சண்டைப்பயிற்சி மேற்கொள்கிறார்.
இப்படத்தின் இயக்குனர் தி.சம்பத் குமார் திரைப்படக் கல்லூரி மாணவர். இயக்குனர்கள் பாலா, எழில் ,அகத்தியன் ஆகியோரிடம் உதவி இயக்குனராய் பணி புரிந்தவர். பயணம் என்ற குறும்படத்திற்கு தமிழக அரசின் சிறந்த குறும்பட இயக்குனருக்கான விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் குறித்து தயாரிப்பாளர் ப.சாய் கூறுகையில், , நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் கூறிய கதை பிடித்திருந்ததால் தயாரிப்பில் ஈடுபட்டதாக கூறினார்.
இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 4 மணிக்குள் படம் முடிவதாக கதை அமைந்துள்ளது. சிறுதெய்வ வழிபாடு மற்றும் குலதெய்வம் குறித்த செய்தி இதில் முக்கியமான அம்சமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.