ஆரி அருஜுனா பிறந்தநாளை கொண்டாடிய படக்குழுவினர்

சினிமா

நடிகர் ஆரி அருஜுனாவுக்கு சந்திரா மீடியா விஷன்ஸ் படக்குழுவினர் சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் பிறந்தநாளை கொண்டாடியது.

‘சந்திரா மீடியா விஷன்ஸ்’ எஸ்.எஸ். திருமுருகன் தயாரிக்கும் 2-வது படத்தில் நடிகர் ஆரி அர்ஜுனா நடிக்கிறார். இப்படத்தில் லாஸ்லியா, ஸ்ருஷ்டி டாங்கேவை தொடர்ந்து பிக்பாஸ் புகழ் அபிராமி வெங்கடேசனும் தற்போது இணைந்துள்ளார். இதன் முதல் படைப்பாக யோகி பாபு நடிப்பில் ‘பட்டிபுலம்’ என்ற படத்தை தயாரித்து வெளியிட்டிருந்தது, இப்படத்திற்கு எல்.கே. விஜய் ஒளிப்பதிவு செய்ய, சி.சத்யா இசையமைத்துள்ளார். வீரசமர் கலை பணிகளை மேற்கொள்ள தியாகராஜன்.எம். எடிட்டிங் செய்கிறார். கதை திரைக்கதை வசனம் எழுதி ஆல்பர்ட் ராஜா இயக்குகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. சென்னை, பாண்டிச்சேரி மற்றும் மலேசியா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது