விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் மாஸ்டர் படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இவர்கள் தவிர மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உட்பட பலர் நடிக்கின்றனர். விஜய் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். விஜய் பேராசிரியர் வேடத்தில் நடிப்பதால் தான் இப்படத்திற்கு மாஸ்டர் என பெயரிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் அனிரூத் இசையில் ‘ஒரு குட்டி கதை’ என தொடங்கும் முதல் பாடலை விஜய் குரலில் பாடியுள்ளார். இப்பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகிறது .
இதற்கு முன்பு கத்தி படத்தில் அனிருத் இசையில் செல்பி புள்ள பாடலை விஜய் பாடியது குறிப்பிடத்தக்கது.

மாஸ்டர் படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 9-ந் தேதி வெளியாக உள்ளது. தொடர்ந்து 4, 5 நாட்கள் விடுமுறை வருவதால் இந்த தேதியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.