தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா தான் நடித்துள்ள படத்தின் பிரமோஷனுக்காக, பாலிவுட் நடிகை கரீனா கபூரை போல புடவை அணிந்து காட்சியளிக்கும் புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. விஜய் சேதுபதி, நடிகை திரிஷா நடித்து வெளியான 96 படம் அனைவரின் பாராட்டையும் பெற்றது. இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் ஷர்வானந்த் மற்றும் சமந்தா நடித்துள்ளனர். இதனை பிரேம் குமார் இயக்கி உள்ளார். படம் தற்போது ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. எனவே இந்தப் படத்துக்கான பிரமோஷன் பணிகளில் சமந்தா தீவிரமாக ஈடுபட்டார்.

இதன் ஒரு பகுதியாக ஜானு என பிரிண்ட் செய்யப்பட்ட புடவையை அணிந்து நடிகை சமந்தா காட்சி அளிக்கும் புகைப்படங்களை படக்குழு வெளியிட்டது. இந்த படங்கள் ஏற்கனவே கரீனா கபூரால் அணிந்து வெளியிடப்பட்ட புகைப்படங்கள் போலவே இருந்தாலும் இணையதளத்தில் ரசிகர்களை கவர்ந்துள்ளது.