சென்னை, பிப்.13: குரூப்-2ஏ முறைகேடு தொடர்பாக கைதான இடைத்தரகர் ஜெயக்குமாரின் இரண்டு கார்கள் இன்று பறிமுதல் செய்யப்பட்டன.அவரிமிருந்த பல லட்சம் ரூபாயையும் போலீசார் கைப்பற்றினர். இவை அனைத்தும் தேர்வு எழுதியவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்டது ஆகும்.

குரூப் -4 மற்றும் குரூப்-4ஏ தேர்வுகளில்ந டைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி சுமார் 50பேரை கைது செய்துள்ளனர்.
குரூப்-2 ஏ தொடர்பாக மட்டும் 20பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இ வர்களில் முக்கிய குற்றவாளியான ஜெயக்குமாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் கொடுது“த தகவலின் அடிப்படையில் இன்று மேலும் ஒருவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
விசாரணை முடிவில் இவர் கைது செய்யப்படுலாம் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தநிலையில் போலீஸ் காவல் முடிந்து நாளை இடைத்தரகர் ஜெயக்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் ராமமேஸ்வரத்தில் இருந்து விடைத்தாள்களை சென்னைக்க கொண்டு வரும்போது உடன் வந்த 2 கார்கள் இன்று பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் அவரிடமிருந்து பல லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறைகேட்டில் ஈடுபட்டு தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களிமிருந்து இவர் தலா. 7 லட்சம் வீதம் வசூலித்து இருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் ரிக்கார்டு கிளார்க்காக பணியாற்றி கைதான ஓம் காந்தன் மற்றும் அவரது கூட்டாளிகளிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.