பெங்களூரு, பிப்.13:  பெங்களூரு ஓபன் டென்னிஸ் போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் ஜெர்மனி வீரரை வீழ்த்தி, செனனை வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 3வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

3-வது பெங்களூரு ஓபன் டென்னிஸ் போட்டி பெங்களூருவில் கடந்த 10-ம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. 16-ம் தேதி வரை நடக்கும் இத்தொடரில் ஒற்றையர் பிரிவில் 48 வீரர்களும், இரட்டையர் பிரிவில் 16 வீரர்களும் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில், நேற்று நடந்த ஒற்றையர் பிரிவு போட்டி ஒன்றில் சென்னையை சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஸ்வரன்- ஜெர்மனியின் செபாஸ்டியன் பேன்சிலோவை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடந்த இந்தபோட்டியில் குணேஸ்வரன் 6-2, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் செபாஸ்டியனை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

இதேபோல், ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று போட்டியில் சென்னை வீரர் ராம்குமார் 6-1, 6-3 என்ற நேர்செட்டில் சக நாட்டவரான அபினவ் சஞ்சீவை பந்தாடி 3-வது சுற்றுக்குள் நுழைந்தார். மேலும், இரட்டையர் பிரிவின் முதல் சுற்று போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி 7-6 (2), 6-4 என்ற நேர் செட்டில் சுலோவெனியாவின் பிளாஸ் ரோலா, சீனாவின் ஷின்ஜென் ஜாங் இணையை வீழ்த்தி காலிறுதி சுற்றை எட்டியது.