புதுடெல்லி, பிப்.18: சமூக வலைதளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் 50 மில்லியன் ஃபலோவர்களை (பின்தொடர்வோர்) கொண்ட முதல் இந்தியர் என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளார், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி.

கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட இன்றைய இளம் தலைமுறையினருக்கு முன்னோடியாக திகழ்ந்து வரும் கேப்டன் கோலியை. சமூக வலைதளங்களில் கிரிக்கெட் விமர்சகர்கள், சக கிரிக்கெட் வீரர்கள் தவிர்த்து, லட்சக்கணக்கான ரசிகர்கள் பட்டாளம் பின் தொடர்ந்து வருகின்றன.

குறிப்பாக, பிரபல சமூக வலைதளங்களில் இன்ஸ்டாகிராமில் அவர் அவ்வப்போது பதிவிடும் போட்டிகள் குறித்த கருத்து, புகைப்படங்கள், பயிற்சி செய்யக்கூடிய வீடியோ, மனைவி அனுஷ்கா சர்மாவோடு சுற்றுலா செல்லும் படங்கள் டிரெண்டாக தவறுவதில்லை. இந்த நிலையில்தான், இன்ஸ்டாகிராமில் கோலியை பின்தொடர்வோரின் எண்ணிக்கை 50 மில்லியனை (5 கோடி பேர்) எட்டி உள்ளது.