லக்னோ, பிப்.19: இரண்டு ஆண்டுகளாக காதலித்து பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையே திருமணம் செய்த ஜோடி 12 மணிநேரத்திலேயே விவாகரத்து செய்த சம்பவம் உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹமீர்புரில் நடந்துள்ளது.

ஹமீர்பூர் மாவட்டத்தின் மௌடகா பகுதியில் ஒரு பள்ளி மாணவி ஒருவர் தனது வகுப்பு தோழனான சந்தீப்பை இளம் வயது முதல் காதலித்து வந்தாள்.
ஒரு கட்டத்தில் இந்த விவகாரம் குறித்து அப்பெண்ணின் குடும்பத்தினர் அறிந்ததும் கோபம் அடைந்தனர். சந்தீப்பின் மீது பாலியல் குற்றம் சாட்டி மௌடகா போலீசில் நிலையத்தில் புகார் அளித்தார்.
உடனடியாக சந்தீப் கைது செய்யப்பட்டார், ஆனால் சில மணி நேரத்தில், அவள் தனது புகாரைத் திரும்பப் பெற்றார்.

பின்னர் இளைஞனின் குடும்பத்தினர் முன்னிலையில் ஒரு கோவிலில் தம்பதியினர் திங்கள்கிழமை திருமணம் செய்து கொண்டனர். ஆனால் செவ்வாயன்று, அந்தப் பெண் மீண்டும் தனது மனதை மாற்றி, 12 மணி நேர திருமணத்தை முறித்துக் கொண்டு விவாகரத்துக்கு முன் வந்தார்.