சென்னை, பிப்.20: இந்தியன் 2 படப்பிடிப்பின் போது ராட்சத கிரேன் அறுந்து விழுந்து விபத்து ஏற்படுவதற்கு சில வினாடிகளுக்கு முன்னர் அங்கு நடிகர் கமல்ஹாசனும், நடிகை காஜல் அகர்வாலும் இருந்தனர் என்றும் அவர்கள் இருவரும் அதிர்ஷ்டவசமாக அந்த இடத்தை விட்டுச் சென்றதால் விபத்திலிருந்து தப்பினார்கள் என்ற அதிர்ச்சி தகவலை ஆடை வடிவமைப்பாளர் அமிர்தா ராம் வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள டுவிட்டரில், விபத்து நடந்த இடத்தில் நடிகர் கமல், நடிகை காஜல் அகர்வால் ஆகியோருடன் இருந்ததாகவும் அவர் கூறியிருக்கிறார். இந்த கோர விபத்து நடைபெறுவதற்கு பத்து வினாடிகளுக்கு முன்பு தான் நாங்கள் அங்கிருந்து நகர்ந்து சென்றோம். அதனால் பெரும் விபத்திலிருந்து உயிர் தப்பியிருக்கிறோம் என்று அவர் டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.

தாங்கள் நின்றிருந்த இடத்தில் கிரேன் விழுந்து நசுங்கியதால் கீழே கிடக்கும் விதானத்தின் படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.