ஸ்ரீநகர், பிப்.22: ஜம்மு-காஷ்மீரின் பிஜ்பெஹரா பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 லஷ்கர் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்திய எல்லைக்குள் ஊடுருவும் தீவிரவாதிகளை அழிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் மற்றும் ராணுவத்தினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஜம்மு-காஷ்மீரின் பிஜ்பெஹரா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர், ராணுவத்தினர் மற்றும் ஜம்மு-காஷ்மீர் போலீஸார் ரகசிய தேடுதல் வேட்டையில் அதிகாலையில் ஈடுபட்டனர்.

அப்போது சங்கம் என்ற பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் உள்ளிட்ட வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.