சென்னை, பிப்.22:

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.32 ஆயிரத்து 576-க்கு விற்பனை ஆகிறது.
ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்தது.

சென்னையில் நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.73-ம், பவுனுக்கு ரூ.584-ம் அதிகரித்து ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 51-க்கும், ஒரு பவுன் ரூ.32 ஆயிரத்து 408-க்கும் விற்பனையானது.
இன்று கிராமுக்கு மேலும் 21-ம், பவுனுக்கு ரூ.168-ம் அதிகரித்தது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 72-க்கும், ஒரு பவுன் ரூ.32 ஆயிரத்து 576-க்கும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.52 ஆயிரத்து 400-க்கும், கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ரூ.52.40-க்கும் விற்பனை ஆகிறது.