சென்னை, பிப்.22:

சிவராத்திரிக்காக கண் விழித்திருந்த போது, 3-வது மாடியிலிருந்து தவறி விழுந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் ஐ.சி.எப். பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-

சென்னை காந்தி நகர் ஹவுசிங் போர்டு மூன்றாவது மாடியில் வசித்துவந்தவர் ஆழ்வார்ம்மாள் (வயது 75). சிவராத்திரியையொட்டி, நேற்றிரவு முழுவதும் கண் விழிக்க வேண்டும் பால்கனியில் நாற்காலி போட்டு அமர்ந்ததாக கூறப்படுகிறது. அப்போது, எதிர்பாராதவிதமாக 3வது மாடியில் இருந்து அவர் தவறி விழுந்துள்ளார். தகவலறிந்துவந்த ஐசிஎப் போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆழ்வார்ம்மாளை மீட்டு கே.எம்.சி.க்கு அனுப்பிவைத்தனர்.

ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஆழவார்ம்மாளின் மகன் சங்கர் (வயது 48) அளித்த புகாரின்பேரில் ஐ.சி.எப். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.