துப்பறிவாளன்-2 படம்: மிஷ்கினை நீக்கிய விஷால்

சினிமா

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் துப்பறிவாளன் படம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் 2-ம் பாகம் இதே கூட்டணியில் உருவாகும் என அறிவிக்கப்பட்டது. உடனே படப்பிடிப்பு தொடங்கப்பட்டு 30 சதவீத படப்பிடிப்பும் நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில், இந்த படத்தில் இருந்து இயக்குனர் மிஷ்கின் நீக்கப்படுவதாக கதாநாயகனும், படத்தின் தயாரிப்பாளருமான விஷால் அதிரடியாக அறிவித்துள்ளார்.

இது குறித்து, என்ன காரணம் என விசாரித்ததில் இருவருக்குள் சம்பள விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், பேசியதைவிட அதிக சம்பளம் மிஷ்கின் கேட்பதாகவும், கூறப்படுகிறது. இதனாலயே படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.