சிதம்பரம், பிப்.24:

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் கிழக்கு மாவட்டத்தில் 8 இடங்களில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
இது தொடர்பாக கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் எம்எல்ஏவுமான கே.ஏ.பாண்டியன் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வருகிற 24ம் தேதி திங்கட்கிழமை பண்ருட்டி சட்டமன்ற தொகுதியின் அண்ணாகிராமம் ஒன்றியம் சார்பில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் டாக்டர் சுனில், தலைமை கழக பேச்சாளர் காரை செல்வம், இதே நாளில் பண்ருட்டியில் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம், தலைமை கழக பேச்சாளர் ஆவடி குமார், ஸ்ரீமுஷ்ணத்தில் முன்னாள் அமைச்சர் எம்.சி. தாமோதரன், தலைமை கழக பேச்சாளர் கவிஞர்.தேவசகாயம் ஆகியோர் பேசுகின்றனர்.

25 ஆம் தேதி சிதம்பரத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமை கழக பேச்சாளர் போளூர் ஜெயகோவிந்தன், முன்னாள் அமைச்சர் கே.கே.கலைமணி, அதே நாளில் காட்டுமன்னார்கோயிலில் எம்எல்ஏ என்.முருகுமாறன், தலைமை கழக பேச்சாளர் கடியாபட்டி கிருஷ்ணன், 26 ஆம் தேதி பரங்கிப்பேட்டையில் மகளிர் அணி துணைச் செயலாளர் கலைச்செல்வி, தலைமை கழக பேச்சாளர் எம்.ஜி. பாஸ்கர் , 27ம் தேதி குமராட்சி ஒன்றியத்தில் காஞ்சி.பன்னீர்செல்வம், தலைமை கழக பேச்சாளர் பஞ்சாட்சரம், 28ஆம் தேதி நெல்லிக்குப்பத்தில் முன்னாள் அமைச்சர் சின்னையா, தலைமை கழக பேச்சாளர் போளூர் எம்.குமார் ஆகியோர் பங்கேற்று பேசிகின்றனர்.

மேற்கண்ட பொதுக்கூட்டங்களில் எம்எல்ஏக்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி மற்றும் சங்க பிரதிநிதிகள், செயல் வீரர், வீராங்கனைகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவரது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.