சென்னை, பிப்.24:

பள்ளிக்கரணை சுற்றுவட்டார பகுதிகளில் கைவரிசை காட்டிவந்த கொள்ளை கும்பலை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பள்ளிக்கரணை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் செல்போன், பைக்குகள் தொடர்ச்சியாக திருட்டு போவதாக பள்ளிக்கரணை போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன்பேரில், பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமரா பதிவின் அடிப்படையின் விசாரணை நடத்தி, கொள்ளையர்களின் அடையாளத்தை கண்டறிந்து, 3 பேரையும் கைது செய்தனர்.

கைதானவர்கள், செம்மஞ்சேரியை சேர்ந்த ஜெய்சன் (வயது 22), மகேஷ் (வயது 20), கண்ணகிநகரை சேர்ந்த நந்தகுமார் (வயது 19) என்பது விசாரணையில் தெரியவந்தது. இவர்களிடம் இருந்து 6 செல்போன்கள், 3 பைக்குகள், 15 கிலோ அலுமினிய பொருட்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

போதைப்பொருட்களை வாங்குவதற்காகவே இவ்வாறான திருட்டு செயலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட மூன்று பேரும் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.