பங்காரு அடிகளாரின் அவதார பெருமங்கல முத்துவிழா

TOP-4

மேல்மருவத்தூர், பிப்.25: அடிகளாரின் 80வது அவதாரப் பெருமங்கல முத்துவிழா மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நாளை தொடங்குகிறது.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்விழா, நாளை (பிப்.26) தொடங்கி மார்ச் 3-ம் தேதி வரை 7 நாட்கள் மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது.

நாளை அதிகாலை 3.15 மணியளவில் சிறப்பு அபிஷேகத்துடன் விழா தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து காலை 5 மணிக்கு மாங்கல்ய பூஜை, 7.20 மணிக்கு அடிகளாருக்கு சேலம்-நாமக்கல் மாவட்டங்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் வரவேற்பும், பாதபூஜையும் நடைபெற உள்ளது.

காலை 9 மணிக்கு அடிகளார்-லட்சுமி பங்காரு அடிகளாருக்கு சதாபிஷேகம், திருக்கல்யாணம் சிறப்பான முறையில் நடைபெற உள்ளது. இதேபோல், விழாநாட்கள் முழுவதும் சிறப்பான அபிஷேகம், வழிபாடு நடைபெற உள்ளது.

விழாவின் முக்கிய நிகழ்வாக, மார்ச் 3-ம் தேதி காலை 8 மணிக்கு அடிகளாரை மலர் அலங்கார ரதத்தில் ஊர்வலமாக அழைத்துவரும் நிகழ்ச்சி, இதனைத் தொடர்ந்து, காலை 8.45 மணிக்கு அடிகளாரின் அருள்தரிசனம் நடைபெற உள்ளது. இதில், பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு அடிகளாரின் ஆசி பெற்று செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.