புதுடெல்லி, பிப்.26:  எதிர்வரும் மே மாதத்திற்குள் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வராவிட்டால், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர் டிக் பவுண்ட் தெரிவித்துள்ளார்.

2020-ம் ஆண்டுக்கான சர்வதேச ஒலிம்பிக் போட்டி, ஜப்பானின் டோக்கியோ நகரில் ஜூலை 24-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நிலையில், சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ், ஜப்பானிலும் பரவத் தொடங்கியுள்ளது. இதனால், அங்கு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எனவே, எதிர்வரும் மே மாத இறுதிக்குள், கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டுவரப்பட முடியாத பட்சத்தில், நடப்பாண்டிற்கான சர்வதேச ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும், போட்டியை தள்ளிவைக்க வாய்ப்பில்லை எனவும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர் டிக் பவுண்ட் கூறியுள்ளார்.