சென்னை, மார்ச் 2:

பண மோசடி செய்ததாக கூறி, அளிக்கப்பட்ட புகாரின்பேரில் அகில இந்திய இந்து மகா சபா தலைவர் ஸ்ரீ கண்டனை போலீசார் இன்று கைது செய்தனர்.

டெய்லர்ஸ் சாலையில் அமைந்துள்ள அகில இந்திய இந்து மகா சபா தலைவர் கோடம்பாக்கத்தை சேர்ந்த ஸ்ரீகண்டன் மீது, காரப்பாக்கத்தை சேர்ந்த தொழிலதிபர் விமல் கடந்த 5-ம் தேதி கீழ்ப்பாக்கம் போலீசில் புகார் அளித்திருந்துள்ளார். தன்னை திருவள்ளூர் மாவட்ட செயலாளராக நியமித்தது, அலுவலகத்தை புதுப்பிக்க வேண்டும், புத்தகங்கள் அச்சடிக்க வேண்டும் எனக்கூறி ரூ.10 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு, இன்றளவும் ஸ்ரீகண்டன் திருப்பி தரவில்லை என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.

இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்திவரும் கீழ்ப்பாக்கம் போலீசார், இன்று அதிகாலை ஸ்ரீகண்டனை கைது செய்தனர்.

ஸ்ரீகண்டன் மீது ஏற்கனவே கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீசில் பாலியல் புகார் உள்ளதும், அந்த வழக்கில் ஸ்ரீகண்டன் முன்ஜாமீன் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.