லக்னோ, மார்ச் 3: உத்தரப்பிரதேச மாநில அரசின் புதிய கலால் கொள்கையின் கீழ், ஐஎம்எஃப்எல் ரக மது வகைகள் இனி அலுமினிய கேன்களில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டிலேயே அலுமினிய கேன்களில் மது விற்கும் முதல் மாநிலமாக உத்தரப்பிரதேசம் உள்ளது.

தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் கண்ணாடி பாட்டில்களை விட அலுமினிய கேன்கள் மலிவாக கிடைக்கின்றன. பாட்டில்கள் உடைவதால் ஏற்படும் இழப்புகளைக் குறைப்பதன் மூலமும், பேக்கேஜிங் செலவைக் குறைப்பதன் மூலமும் மதுபான தயாரிப்பு நிறுவனங்கள் பயனடைகின்றன என்று உ.பி. அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கலால் கொள்கையின் கீழ், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மதுபானங்களை அட்டைப் பாக்கெட்டுகளில் விற்பனை செய்வதற்கான திட்டத்துக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.