சென்னை, மார்ச் 5: கொரோனா வைரஸ் குறித்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் சண்முகம் அறிவுறுத்தி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
அரசு மருத்துவர்களும் தனியார் மருத்துவர்களும் கொரோனா வைரைஸ் தொடர்பாக ஆய்வு கூட்டங்களை மேற்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
கொரோனா வைரஸ் தீவிரம், அதை தடுக்கும் வழிமுறைகள், மருத்துமனைகள், அவசர ஊர்திகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் கவனம் செலுத்த வேண்டும்.
மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு என்று தனியாக வார்டு ஏற்படுத்த வேண்டும்.

கொரனா வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுவதை தடுக்க நோயாளிகள் முதல் மருத்துவ பணியாளர்கள் வரை கைகளை அடிக்கடி கழுவுவதை உறுதிபடுத்த வேண்டும். அதற்கு தேவையான கிருமிநாசினி திரவங்களை மற்றும் மருந்துகள் கையிருப்பில் இருக்க வேண்டும்.
மாவட்ட அளவில் ஒருங்கினைப்பு குழுவை ஏற்படுத்தி அந்த குழுவில் உள்ளாட்சி அமைப்புகள் பிரதிநிதிகள், கல்வி அதிகாரிகள், காவல்துறை, வருவாய் மற்றும் மத்திய அரசு அதிகாரிகளை இடம் பெறச் செய்து கொரனா குறித்து விழிப்புணர்வுகளையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

சுற்றுப்புற சூழலை தூய்மையாக வைத்துக்கொள்வதை இந்த குழுவின் மூலம் உறுதிபடுத்த வேண்டும்.
மக்கள் அதிகம் கூடும் இடங்களான பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் பேன்ற இடங்களில் துண்டு பிரசுரங்கள் மூலம் கொரணா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கைகளை நன்றாக கழுவ கிருமி நாசினி திரவங்களை வைத்திருக்க வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கிராமங்களில் ஏற்படுத்த வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் நாள்தோறும் அதை கண்கானிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.