மனிதரிடமிருந்து விலங்குகளுக்கு பரவும் கொரோனா

உலகம்

ஹாங்காங், மார்ச் 5: ஹாங்காங்கில் வளப்பு நாய்க்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது மருத்து உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஹாங்காங்கில் 60 வயதான ஒரு பெண்ணின் வளப்பு நாய்க்கு கொரோனா உறுதி செய்யப் பட்டுள்ளது. மனிதனிடமிருந்து விலங்குகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இது முதல் நிகழ்வாகும்.
இதனைத் தொடர்ந்து அந்த நாய் தனியாக சிகிச்சை பெற்று அங்குள்ள ஒரு விலங்கு மையத்தில் வைக்கப்பட்டு வருகிறது. வேளாண் மீன்வள பாதுகாப்புத் துறை கொரோனா தொடர்பாக ஒரு பால்மேரியன் நாய் பல முறை பரிசோதிக்க உட்படுத்தப்பட்டதாகக் கூறியது.

பரிசோதனையில் குறைந்த அளவிலான கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மனித-விலங்குகளிடமிருந்து வைரஸ் பரிமாற்றம் தொடர்பான நிகழ்வு என்று உலக விலங்கு சுகாதார அமைப்பு இதனை ஒப்புக் கொண்டுள்ளது.