கொரோனா வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் மோடி

TOP-5 இந்தியா

புதுடெல்லி, மார்ச் 7:

கொரோனா வைரஸ் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாமென்று பிரதமர் மோடி நாட்டு மக்களை கேட்டுக் கொண்டிருக்கிறார்.
மக்கள் மருத்துவ தினத்தை முன்னிட்டு அத்திட்டத்தின் பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார்.

அப்போது அவர் கூறியதாவது:-
‘இந்தியாவின் பிரதமர் மக்கள் மருத்துவ திட்டம், நாட்டின் ஒவ்வொரு நபருக்கும் மலிவான மற்றும் சிறந்த சிகிச்சையை வழங்குவதற்கான உறுதிமொழியாகும். நாடு முழுவதும் இதுவரை 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவ மையங்கள் திறக்கப்பட்டுள்ளன என்பதில் நான் மிகவும் திருப்தி அடைகிறேன்.

இந்த மையங்களால் இதுவரை கோடிக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தர மக்கள் ரூ.2000-2500 கோடியை மிச்சப்படுத்தி உள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் மிகவும் வருத்தப்படுகிறார்கள். இதுபோன்ற காலங்களில் வதந்திகளும் விரைவாகப் பரவுகின்றன. சிலர் இதை சாப்பிடக்கூடாது, அது செய்யக்கூடாது என்று கூறுகிறார்கள், சிலர் இதை சாப்பிடுவதன் மூலம் கொரோனா வைரஸைத் தவிர்க்கலாம் என கூறுகின்றனர். நாம் இந்த வதந்திகளையும் தவிர்க்க வேண்டும். நீங்கள் என்ன செய்தாலும், உங்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் அதைச் செய்யுங்கள். என்றார் பிரதமர் மோடி.