போபால், மார்ச் 7:

ஒரு புலி தனது துணையைத் தேடி 2,000 கி.மீ. பயணித்த நிகழ்வு சமூக ஊடகங்களில் அதிகளவில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிரா மாநில வனத்துறையின் அதிகாரியான பிரவீன் கஸ்வான் என்பவர் வரைபடம் ஒன்றை வெளியிட்டார், அதில் அவர் எழுதியதாவது, ‘ஒரு புலி தனது துணையைத் தேடி கால்வாய்கள், வயல்கள், காடுகள், சாலைகள் ஆகியவற்றைக் கடந்து, பகலில் ஓய்வெடுத்து, இரவில் 2,000 கி.மீ. வரை பயணம் செய்தது.

இந்த புலி 2,000 கி.மீ. கடந்த பிறகு ஞானகங்கா காட்டில் குடியேறியுள்ளது. இந்த சரணாலயம் மகாராஷ்டிராவில் தெலுங்கானாவை ஒட்டியுள்ள திப்பேஸ்வர் உயிரியல் பூங்காவில் அமைந்துள்ளது. இந்த ஆண் புலி தனது துணையான பெண் புலியை இவ்வளவு தூரம் அலைந்து திரிந்திருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.