சென்னை, மார்ச் 7:

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாளையொட்டி தென்சென்னை வடக்கு மாவட்டம் ஆயிரம் விளக்கு பகுதி 109-வது தெற்கு வட்ட செயலாளர் பி.ராஜேஷ் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

சூளைமேடு பஜனைகோயில் தெருவில் 109-வது தெற்கு வட்ட செயலாளர் பி.ராஜேஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியில் பணியாற்றி இறந்த மூவர் குடும்பத்திற்கு தலா ரூ. 5 ஆயிரம் நிதி உதவியும், நலிந்த கட்சி தொண்டருக்கு ஒரு இஸ்திரி பெட்டியும், மற்றும் ஒருவருக்கு தையல் இயந்திரமும், வட்டத்தை சார்ந்த 2 இளைஞர் அணிகளுக்கு கிரிக்கெட் உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளுடன் ஆயிரம் பெண்களுக்கு புடவை மற்றும் 1000 பேருக்கு அன்னதானத்தை தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் தி.நகர் பி.சத்தியா எம்எல்ஏ வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் நுங்கை மாறன், பகுதி செயலாளர் நுங்கை செல்வகுமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் வரதை முத்து பரணி, மாவட்ட துணை செயலாளர் யு.கற்பகம்,வழக்கறிஞர் ஆர்.சதாசிவம், நிர்வாகிகள் மன்சூர்அகமது, தீபகா பில்டர்ஸ் கருணாகரன், பர்மா ராமமூர்த்தி, எ.தரணி பாய், இ. ராஜலட்சுமி, பி.சாந்தி, சாண்ட்ரோ வி. குமார், பி.பன்னீர்செல்வம், எம்.சுல்தான், கே.எம்.உதயகுமார், ஆர்.சரவணன், ஆர்.பிரேமா,ஜானகிராமன், ராஜேஷ்குமார், ஆர்.ரகு, விஜி, சத்தியா, கே.பிரதீப் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்