சென்னை, மார்ச் 7:  ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகள் வரும் 29ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அதற்கான தீவிர பயிற்சிகளில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் கேப்டன் தோனி, 5 பந்துகளையும் தவறவிடாமல் 5 சிக்சர்களுக்கு விளாசி ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

இந்த வீடியோவை ஐபிஎல் போட்டியின் அதிகாரப்பூர்வ ஒளிபரப்புச் சேனல், தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. உலகக்கோப்பைக்குப்பின்னர் 7 மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் பேட்டை கையில் எடுத்துள்ள தோனி, பயிற்சி ஆட்டத்திலேயே சிறப்பான பங்களிப்பை செலுத்துவதை, ‘இது வெறும் டிரெய்லர்தான்’ என கூறி அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.