சென்னை, மார்ச்.9: அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான சி.பொன்னையன் மாநில திட்டக்குழு துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முதலமைச்சர் தலைமையில் மாநில திட்டக்குழு செயல்படுகிறது. மாநில அரசுக்கு திட்டமிடுதல் தொடர்பாக ஆலோசனைகளை வழங்குவதற்கு திட்டக்குழு துணைத் தலைவராக பொன்னையன் நியமிக்கப்பட்டிருப்பதாக அரசு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் அமைச்சரவைகளில் இடம் பெற்றவர் பொன்னையன். அதிமுகவின் அவைத்தலைவராகவும் பதவி வகித்தவர். திட்டக்குழு துணைத்தலைவருக்கு அரசு கார் வழங்கப்படும். அவருக்கு அமைச்சருக்கான அந்தஸ்து கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.