கோவா, மார்ச் 9:  இந்தியன் சூப்பர் லீக் எனப்படும் ஐ.எஸ்.எல், கால்பந்து தொடரின் இறுதிச்சுற்று போட்டியில் சென்னை-கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

கோவாவில் நேற்று முன்தினம் நடந்த 2-வது சுற்று அரையிறுதி போட்டியில், சென்னை – கோவா அணிகள் மோதின. முதல்பாதியில் கோல் அடிக்காமல் பின்தங்கிய சென்னை அணி, முடிவில் 2-4 என்ற கணக்கில் தோல்வியடைந்தாலும், ஒட்டுமொத்த கோல் அடிப்படையில் 6-5 என வெற்றிபெற்று சென்னை அணி பைனலுக்கு முன்னேறியது.

இதேபோல், நேற்று நடந்த மற்றொரு 2வது சுற்று அரையிறுதி போட்டியில், பெங்களூரு அணியை 1-3 என்ற கணக்கில் வென்ற கொல்கத்தா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்த நிலையில், வரும் 14-ம் தேதி கோவாவில் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் சென்னை-கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.