சென்னை,மார்ச்.9:

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திருச்சி சிவா உள்ளிட்ட 3 திமுக வேட் பாளர்கள் இன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

வரும் 26-ந் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திமுக சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ ஆகியோர் போட்டியிடுவார்கள் என கடந்த வாரம் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார்.
இதை தொடர்ந்து இந்த மூன்று பேரும் இன்று தலைமை செயலகத்தில் 12.10 மணியளவில் தேர்தல் அதிகாரி சீனிவாசனிடம் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர். இந்த வேட்புமனுதாக்கலின் போது டி.ஆர்.பாலு, ஏ.வ.வேலு. ஐ.பெரியசாமி உள்ளிட்ட திமுக மூத்த நிர்வாகிகள் உடனிருந்தனர்.

வேட்பு மனு தாக்கல் செய்ய 12-ம் தேதி கடைசி நாளாகும். தாக்கல் செய்யப்பட்டும் மனுக்கள் மீதான பரிசீலனை வருகிற 16-ந் தேதி நடைபெறுகிறது.