திருத்தணி, மார்ச்9: திருத்தணி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது.

அரக்கோணம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோ.அரி தனது 2018 -2019 ஆம் ஆண்டு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 25 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து அதன் அடிப்படையில் இந்த நிதி மூலம் 41 மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர ஸ்கூட்டர்களை ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் வழங்கினார் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர் பேசும்போது இதுபோன்ற நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி களை பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கினால் ஏராளமானோர் பயன் பெற முடியும்.

ஆனால் இன்றைக்கு ஒதுக்கப்பட்டு இந்த மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த ஸ்கூட்டர்களை வழங்குவதன் மூலம் அவர்கள் எதிர்காலம் செம்மைப் படுத்திக் கொள்ளவும், தங்கள் சொந்தக் காலில் நிற்கவும் தொழிலுக்கும் வேலைகளுக்கும் அவர்களே சென்று வருவதற்கும் வாய்ப்பு ஏற்படுத்துவதோடு அவர்கள் பொருளாதார வளர்ச்சியில் மேம்பட முடியும்.

இந்த நல்ல தினத்தில் இது போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த திட்டத்தின் மூலம் ஸ்கூட்டர்களை வழங்குவது ஒரு பெருமைக்குரிய விஷயம் என்று பேசி அனைவரையும் வாழ்த்திப் பேசினர். தொடர்ந்து பசுமை வீடு திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு வீடு கட்டும் அரசாணையை அமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோ.அரி ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளின் மாவட்ட அலுவலர் தங்கவேல் திருத்தணி ஒன்றியக்குழு துணைத் தலைவர் இ.என். கண்டிகை ரவி முன்னாள் நகராட்சித் தலைவர் டி. சௌந்தரராஜன் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கேபிள் எம்.சுரேஷ் மற்றும் அதிகாரிகள் அதிமுகவினர் கலந்து கொண்டனர்