சென்னை, மார்ச் 10: தம்பிதுரை, கே.பி.முனுசாமி, ஜி.கே.வாசன் ஆகியோர் வரும் 12-ம் தேதி மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் செய்யவுள்ளனர்.
தமிழகத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆறு பேரின் பதவிக் காலம், ஏப்ரல் 2-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய வரும் 26-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

காலியிடங்களுக்கு திமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலுக்கு திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ ஆகியோரை கடந்த வாரம் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். இதை தொடர்ந்து இந்த முன்று பேரும் நேற்று காலை தேர்தல் அதிகாரி சீனிவாசனிடம் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான வேட்பாளர் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் தம்பிதுரை, கே.பி.முனுசாமி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

இந்த மூன்று வேட்பாளர்களும் நாளை மறுநாள் அதாவது 12-ம் தேதி காலை வேட்புமனுதாக்கல் செய்யவுள்ளனர். இந்த மூன்று வேட்பாளர்கள் வேட்புமனுதாக்கல் செய்யும் அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் தாக்கல் செய்யவுள்ளனர் என குறிப்பிடதக்கது.
வேட்பு மனு தாக்கல் செய்ய 12-ம் தேதி கடைசி நாளாகும். தாக்கல் செய்யப்பட்டும் மனுக்கள் மீதான பரிசீலனை வருகிற 16-ந் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுக்களை திரும்பப் பெற 18-ம் தேதி கடைசி நாளாகும்.