டெஹ்ரான், மார்ச் 10:  ஈரான் நாட்டின் சிறைகளில் இருக்கும் கைதிகளுக்கு கொரோனா வைரஸ் பரவினால், இழப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சுமார் 70 ஆயிரம் கைதிகளை விடுவிக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.

இது குறித்து ஈரான் தலைமை நீதிபதி இப்ராஹிம் ரைஸி கூறுகையில், பொதுமக்களின் பாதுகாப்புக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்ற நிலையில்தான் சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்படுகிறார்கள். ஒரு வேளை பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் இவர்கள் மீண்டும் சிறைக்குக் கொண்டு வரப்படுவார்கள். இந்த விடுதலை என்பது தற்காலிகமானதுதான் என்று தெரிவித்துள்ளார்.

ஈரானில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7,161 ஆகவும், பலியானோரின் எண்ணிக்கை 237 ஆகவும் உயர்ந்ததை அடுத்து அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று நீதித் துறை முடிவை எடுத்துள்ளது.