சென்னை, மார்ச் 10: சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.33 ஆயிரத்து 728-க்கு விற்பனையானது.

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்தபடி உள்ளது. கடந்த மாதம் சில தினங்கள் மட்டும் தங்கம் விலை குறைந்தது. பிப்ரவரி மாத கடைசி வாரத்தில் குறைந்த தங்கம் விலை இந்த மாத தொடக்கத்தில் இருந்து உயர்ந்தபடி உள்ளது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. இன்று கிராமுக்கு 35 ரூபாய் அதிகரித்தது. இதனால் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4 ஆயிரத்து 214-ஆக உயர்ந்தது.
ஒரு பவுன் ரூ.33 ஆயிரத்து 728-ஆக விற்பனையானது.