சென்னை, மார்ச் 11: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் எந்த வகையிலும் அனுமதிக்க மாட்டோம் என்றும், பிளாஸ்டிக் ஒழிப்புக்கு மக்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று வனத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய திமுக உறுப்பினர் தா.மோ அன்பரசன், திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பல பாலங்கள் இன்னும் கட்டி முடிக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டினார்.
அப்போது குறுக்கிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக ஆட்சியில் பால பணிகள் பற்றி அறிவிப்பு மட்டுமே வெளியிடப்பட்டது. ஆனால் அதற்கான நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் எதுவுமே நடைபெறவில்லை என்று தெரிவித்தார்.

அதிமுக ஆட்சியில் திட்டத்திற்கான நிலங்களை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கும் போது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விடுகிறார்கள். இதனால் தான் பாலங்கள் கட்டும் பணிகள் தாமதமாகி விட்டதாகவும் முதலமைச்சர் கூறினார்.
தற்போது அனைத்து பணிகளையும் விரைந்து நிறைவேற்றிட அரசு நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
இதேபோன்று காட்டுப்பன்சறிகள் பயிர்களை சேதப்படுத்தி வருவது பற்றிய தா.மோ அன்பரசனின் கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர், காட்டுப் பன்றிகளால் வயிறுகள் சேதப்படுத்த படுவதை தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட பட்டிருப்பதாக தெரிவித்தார்.

மேலும் காட்டுப் பன்றிகளால் சேதப் படுத்தப்படும் பயிர்கள் பற்றி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதற்கான இழப்பீடு விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து திமுக உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர் தா.மோ. அன்பரசன், 2007 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் வேளச்சேரி பரங்கிமலை இடையே பறக்கும்ரயில் திட்டத்தை கொண்டுவந்தது. இத்திட்டம் பல ஆண்டுகளாக வேறும் 600 மீட்டர் பணிகள் முடிவடையாமல் கிடப்பில் கிடக்கிறது. நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் இத்திட்டம் முடிவடைக்கப்படாமல் இருப்பதாக தெரிவித்தார். மேலும், பணிகள் முடிந்தால், பரங்கிமலை ரயில் நிலையம், மெட்ரோ, மின்சாரம் மற்றும் பறக்கும் ரயில் என்று ரயில் போக்குவரத்தின் மும்முனை மையமாக இருக்கும் என்பதால் பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். அதோடு ஆலந்தூர் ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நிலம் எடுப்பதில் பல்வேறு சிரமம் இருக்கிறது. இருந்தாலும் விரைவில் நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் முடிக்கப்படும் என்றார். அதே போல ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது நீதிமன்றத்திற்கு சென்றுவிடுவதால் காலதாமதம் ஆகிறது. ஆனால் இவை மீது அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்றார்.
தமோ அன்பரசன்: வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட போதிலும், விவசாயிகளுக்கு அச்சம் உள்ளது, ஆகவே ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதிக்கமாட்டோம் என பேரவையில் தீரமானம் கொண்டு வர வேண்டும் என பேசினார்.

முதல்வர் எடப்பாடி: வேளாண் மண்டலம் தொடர்பாக தீர்மான பேரவையில் கொண்டு வரும் போது, நீங்கள் அவையில் இல்லை, புதிகாக எந்த திட்டத்திற்கு இனி அனுமதி அளிக்க மாட்டோம் என தெரிவித்து உள்ளோம். இதற்காக சட்டமுன்வடிவு கொண்டுவந்து, தற்போது சட்டமாக இயற்றப்பட்டுவிட்டது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திறந்து விட்டவர்கள் நீங்கள், அதனை நாங்கள் மூடிவிட்டோம். இனி விவசாயிகள் எந்த அச்சம் இல்லை என்பதை நானும், சட்டத்துறை அமைச்சரும் விளக்கமாக தெரிவித்து விட்டோம். என்றார்.