செங்குன்றம், மார்ச் 11:

குரோம்பேட்டை நாகல்கேணியை சேர்ந்தவர் டேவிட் (என்கிற) பில்லா (வயது 24). இவர் வழக்கு ஒன்றில் பள்ளிக்கரணை போலீசாரால் கைது செய்யப்பட்டு கடந்த அக்டோபரில் இருந்து புழல் சிறையில் உள்ளார்.

இந்த நிலையில், புழல் விசாரணை சிறை 2-ல் 5வது பிளாக்கில் ராஜா என்ற கைதியுடன் வாய்தகராறு ஏற்பட்டு கைகலப்பானதில், பில்லா தாக்கப்பட்டதாக தெரிகிறது. படுகாயத்துடன் மீட்கப்பட்ட பில்லாவிற்கு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.