மும்பை, மார்ச் 12:

வர்த்தகத்தில் நலிவுற்ற நிறுவனங் களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி கடன் வழங்குவதற்காக யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூர் குடும்பத்தினர் ரூ.5 ஆயிரம் கோடி லஞ்சம் பெற்று இருப்பதை அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மும்பையை தலைமையிடமாகக் கொண்ட யெஸ் வங்கி வாராக்கடன் விவகாரத்தில் மூழ்கும் நிலையில் உள்ளது. அதை சீரமைப்பதற்கான நட வடிக்கையை ஸ்டேட் வங்கி தலைமை யிலான வங்கிகள் கூட்டமைப்பு செய்து வருகிறது.

இந்நிலையில் பல்வேறு முறைகேடு களில் ஈடுபட்டதற்காக யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூரை மும்பையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.
இந்த விசாரணையில் நலிவுற்ற வர்த்தக நிறுவனங்களுக்கு அளவுக்கு மீறி கடன்கள் வழங்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

குறிப்பாக டிஎச்எப்எல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டு உள்ளது. இதற்காக ராணா கபூர் குடும்பத்தினருக்கு ரூ.5 ஆயிரம் கோடி வரை லஞ்சம் கொடுத்ததற்கான விவரங்கள் கிடைத்திருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த லஞ்சத் தொகை மூலம் இங்கிலாந்து மற்றும் நியூயார்க்கில் ஓட்டல்களில் முதலீடு செய்யப்பட்டு இருப்பதும் தெரியவந்து இருப்பதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது.
மேலும் ராணா கபூரின் மனைவி மற்றும் மகள்கள் பெயர்களில் போலி நிறுவனங்கள் நடத்தப்படுவதையும் அம லாக்கத்துறை கண்டுபிடித்து உள்ளது.

மேலும் ராணா கபூர் குடும்பத்தின ருக்கு 72 நிறுவனங்கள் இருப்பதாகவும், யெஸ் வங்கியின் பணம் இதில் முதலீடு செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் மும்பை நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

நேற்று மும்பை தனி நீதிமன்றத்தில் ராணா கபூர் ஆஜர்படுத்தப்பட்ட போது நீதிபதி பிரசாந்த் ஆர். ராஜ்வைத்யா முன்னிலையில் இந்த தகவல்களை அமலாக்கத்துறை வெளியிட்டது. 90 நிமிட விசாரணைக்குப்பிறகு ராணா கபூரை வரும் 14-ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.