சென்னை, மார்ச் 12:

ஸ்ரீயோக லட்சுமி நரசமிம்ம ஸ்வாமி கோயிலுக்கு ரோப்கார் வசதி அமைக்கும் பணி ஏழாண்டு காலமாக நடைபெற்று வருகிறது. விரைந்து முடிக்க முதல்வர் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.

வனத்துறை மற்றும் சுற்றுசூழல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு சோளிங்கர் எம்எல்ஏ சம்பத்குமார் பேசியதாவது: சோளிங்கர் மருத்துவமனை பழமை வாய்ந்த மருத்துவமனையாக உள்ளது. நோயாளிகளுக்கு வசதி இல்லை, இதை அகற்றி ரூ.13 கோடியில் புதிய மருத்துவமனை விரிவாக்க கட்டிடம் கட்டிதர வேண்டும்.

ஸ்ரீயோக லட்சுமி நரசமிம்ம ஸ்வாமி கோயிலுக்கு ரோப்கார் வசதி அமைக்கும் பணி ஏழாண்டு காலமாக நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். பக்தர்களின் சிரமத்தை போக்கும் விரைந்து முடிக்க முதல்வர் மற்றும் அறநிலையத்துறை கேட்டுக் கொள்கிறேன்.

எனது கிராமமான வெங்குப்பட்டு கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம், பிரசவ வார்டு இல்லை, இதற்கு புதிய கட்டிடம் கட்டிதர வேண்டும், புன்னை மருத்துவமனை விரிவாக்கம் செய்து புதிய மருத்துவமனை கட்டிடம் கட்டி தர வேண்டும். காவேரிப்பாக்கத்தில் இயங்கி வரும் சுகாதார மருத்துவமனையை விரிவாக்கம் செய்து விபத்திற்குண்டான நவீன மருத்துவமனை உருவாக்கி தர வேண்டும்.

சோளிங்கர் மோட்டூர் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி கால்வாயை ரூ.1 கோடி மதிப்பீட்டில் காங்கீரிட்டு தலம் போட்டு செய்திட வேண்டும். இராணிப்பேட்டை மாவட்டத்தில் பெரிய ஏரியான காவேரிபாக்கம் ஏரி மற்றும் மகேந்திரவாடி ஏரி தூர்வாரி செப்பணிட வேண்டும். சோளிங்கர் முதல் ஐய்யனேரி, வெங்குப்பட்டு, பரவத்தூர் பாராஞ்சி வழியாக அரக்கோணம் செல்லும் சாலை 12 கிலோ மீட்டர் நெடுஞ்சாலை துறையால் அகலப்படுத்தி தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.