புதுடெல்லி, மார்ச் 12: கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக நாடாளுமன்ற கூட்டத் தொடரை முன்கூட்டியே முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 3-ம் தேதி வரை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் என்று முன்பு அறிவிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் பாதிப்பு புதுடெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற கூட்டத் தொடரை முன்கூட்டியே முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் நடைபெறும் அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் இதுபற்றி முடிவெடுக்கப்படுகிறது.

இதனிடையே இரண்டாவது கூட்டத் தொடர் ஆரம்பித்தது முதல் டெல்லி கலவரம், குடியுரிமைச் சட்டம் ஆகியவை தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், அவை நடவடிக்கைகள் முடங்கியது குறிப்பிடத்தக்கது.