மும்பை, மார்ச் 12: கொரோனா வைரசை உலகளாவிய தொற்று நோயாக உலக சுகாதார அமைப்பு அறிவித்ததைத் தொடர்ந்து இன்று அனைத்து நாடுகளிலும் பங்கு சந்தைகளில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது.

இந்தியாவில் சென்செக்ஸ் 7.58 சதவீதம் அல்லது 2207 புள்ளிகள்வீழ்ச்சி அடைந்துள்ளது. இதே போல் நிப்டி 7.74 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது.

ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் பங்கு சந்தைகளிலும் இன்று ஒரே நாளில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்து வருகிறது.