சிட்னி, மார்ச் 12: பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் கொரோனா வைரசால் பாதிக்கப் பட்டுள்ளார்.

சீனாவின் உஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பால். இதுவரை உலகம் முழுவதும் 4,627 பேர் பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘நானும் என் மனைவி ரீட்டாவும் ஆஸ்திரேலியா வந்தோம். நாங்கள் சோர்வாக உணர்கிறோம். ஜலதோஷமும் உடல் வலியும் இருக்கிறது. கொஞ்சம் காய்ச்சலும் இருக்கிறது.

இருவரும் கொரோனா வைரசுக்கான பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்துக்காகத் தனிமைப்படுத்தப் படுகிறோம் என்று தெரிவித்துள்ளார்.