மும்பை, மார்ச் 13: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, ஐபிஎல் போட்டிகளை ஏப்ரல் 15-ம் தேதி வரை ஒத்திவைத்துள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி தொடர் வரும் 29-ம் தேதி தொடங்குவதாக இருந்த நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பால் போட்டிகளை ஒத்திவைக்குமாறும் அல்லது பார்வையாளர்கள் இன்றி போட்டியை நடத்துமாறும் மத்திய அமைச்சகம் கேட்டுக்கொண்டிருப்பது, குறிப்பிடத்தக்கது.