சென்னை, மார்ச் 14:

அரசியல் சமுத்திரத்திலேயே இன்னும் குதிக்காத நிலையில் நடிகர்கள் ரஜினியும் , கமலும் எப்படி அரசியலில் இணைவார்கள் என்றும், 2021ம் ஆம் ஆண்டு தேர்தலிலும் அதிமக தான் அமைக்கும் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டியில் கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

எங்களைப் பொறுத்த வரையில் அறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா இவர்கள் மிகப் பெரிய சக்திகள் அந்த சக்திகளை வைத்துதான் நாளையும் மக்களை சந்திப்போம்.மக்கள், வணிகர்கள் பாதிக்கின்ற எந்த ஒரு செயலாக இருந்தாலும் நிச்சயமாக ஜிஎஸ்டி கவுன்சிலில் அதற்கான எதிர்ப்பை நாங்கள் தெரிவிப்போம்.

நடிகர் ரஜினிகாந்த் அவருடைய கொள்கை லட்சியத்தை கூறியிருக்கிறார். முதலில் அரசியல் சமுத்திரத்தில் குதிக்கட்டும் அரசியல் இல்லாத நிலையில் எப்படி ரஜினி, கமல் இணைவார்கள் அது ஒரு அனுமானம்.

2021 தேர்தலிலும் அதிமுக தான் மக்களுக்கான ஆட்சியை நிலை நிறுத்தும்.இந்தியாவில் எந்த மாநிலத்திலும் அமல்படுத்தாத திட்டங்கள் தமிழகத்தில் அமல்படுத்தப்படுகிறது.ஒரு சமூக நீதிக்கான அரசு என்பதன் அடிப்படையில் ஏழை எளிய மக்களுக்கான அரசாக இருக்கிறது.

ஸ்டாலின் வயலில் நடந்து செல்வது போல் சமூக வலைதளங்களில் வரும் புகைப்படம் பற்றிய கேள்விக்கு கிராபிக்ஸ் அதிகமாக செய்யலாம் ரெட் கார்பெட்டில் ஷூ போட்டு நடந்து போன மனிதன், வெறும் காலால் நடந்து போனவர் முதல்வர் பழனிசாமி.

இவ்வாறு அவர் பேட்டியில் கூறியுள்ளார்.