மஞ்சு மனோஜ் ஜோடியாக ப்ரியா பவானி சங்கர்

சினிமா

ராக்கிங்க் ஸ்டார் மஞ்சு மனோஜ் ஒரு சிறு இடைவேளைக்கு பிறகு ‘அஹம் பிரம்மாஸ்மி’ படம் மூலம் ரி எண்ட்ரியாகி உள்ளார். இப்படத்தின் துவக்க விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் ராம்சரண் விருந்தினராக கலந்து கொண்டு க்ளாப் அடிக்க, அந்த காட்சியை பேபி நிர்வாணா இயக்க படப்பிடிப்பு துவக்கப்பட்டது. மஞ்சு லக்ஷ்மி, சுஷ்மிதா கோனிடேலா கேமாராவை இயக்க பேபி வித்யா நிர்வாணா முதல் ஷாட்டை இயக்கினார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் உருவாகும் ‘அஹம் பிரம்மாஸ்மி’ படத்தை இயக்குநர் ஸ்ரீகாந்த் என் ரெட்டி இயக்குகிறார். நடிகை ப்ரியா பவானி சங்கர் இப்படத்தில் மஞ்சு மனோஜ் ஜோடியாக நடிக்கிறார்.