காந்தக்கோட்டை, வல்லக்கோட்டை ஆகிய படங்களின் தயாரிப்பிற்கு பிறகு டி.டி. ராஜா தயாரிக்கும் ராஜவம்சம் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.‘
இதைத் தொடர்ந்து இவர் தயாரிக்கும் பெயரிடாத படத்தில் விஜய் ஆன்டனி கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக ஆத்மிகா நடிக்கிறார் .

‘மெட்ரோ’ பட புகழ் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இப்படத்தை இயக்குகிறார் . இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் வழங்க தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார். உரு படத்திற்கு இசையமைத்த ஜோகன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். என்.எஸ். உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் துவங்கியது.