பைசா படம் குறித்து மனம்திறக்கும் ஆரா

சினிமா

‘பைசா’ படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஆரா. அதில் தன் நடிப்பு மூலம் நல்ல நடிகை என பெயர் பெற்றார். தற்போது ‘ஒன் வே’ மற்றும் ‘குழலி’ என இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

‘ஒன் வே’ படம் குறித்து நடிகை ஆரா கூறியதாவது:-
சவாலான கதாப்பாத்திரங்களுக்கு நான் எப்போதும் தயார். நான் நினத்த மாதிரியான கதையமைப்பு கூடிய ‘ஒன் வே’ படத்தில் நடிப்பது மிகுந்த மகிழ்ச்சி. நான் இப்படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்தின் தங்கையாக, கோவை சரளா மகளாக நடிக்கிறேன் என்றார்.

ராஜாத்தி பாண்டியன் தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் எம்எஸ் சக்திவேல் இயக்குகிறார்.
படத்திற்கு பிரபஞ்சன் கதை எழுத, அஷ்வின் ஹேமந்த் இசையமைக்கிறார். முத்துக்குமரன் ஒளிப்பதிவு செய்ய, சரண் சண்முகம் எடிட்டிங் மேற்கொள்கிறார்.