தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யாமேனன், இவர் நடிகர் ஹிப்பாப் ஆதியுடன் இணைந்து நடித்த நான் சிரித்தால் படம் காதலர் தினத்தையொட்டி கடந்த 14-ந் தேதி வெளியானது. ரசிகர்கள் மட்டுமின்றி பல்வேறு பத்திரிகைகள் பாராட்டும் படமாக நான் சிரித்தால் படம் அமைந்தது.

அதில் ஐஸ்வர்யா மேனனின் கேரக்டரும் ரசிக்கும்படி இருந்தது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் ஐஸ்வர்யா உள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த அவர், என்னுடைய கதாபாத்திரம் மிகவும் ரசிக்கும் படியாகவும், ஏற்று கொள்ளும்படியாகவும் இருந்தது. இயக்குனர் ராணாவும், தயாரிப்பாளர் சுந்தர் சி.யும் என்னை உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தனர் என்றார்.
இந்த படத்தை தொடர்ந்து தமிழ்படம்-3 மற்றும் கிட்டி ஆகிய படங்களிலும் நடிக்க ஐஸ்வர்யா மேனன் ஒப்பந்தம் ஆகி உள்ளார்.