சென்னை, மார்ச் 17: கொரோனா தொடர்பாக சட்டபேரவையில் அனைத்து விதமான தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆகவே சட்டபேரவையை ஒத்தி வைக்க வேண்டிய அவசியமில்லை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தலைமைச் செயலாளர் தலைமையில் அதிகாரிகள் கொண்ட குழு தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார்.

சட்டசபையில் கொரோனா கவன ஈர்ப்பு குறித்து எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசுகையில்: கொரோனா முன்னெச்சரிக்கை முன்னெச்சரிக்கை நடவடிக்கை செய்து வருவதை பாராட்டுகிறேன். அந்த வகையில் வைரஸ் பாதிப்பை தடுக்க காவல்நிலையங்கள், சிறைசாலைகள், மருத்துவ பணியாளர்களுக்கு முககவசம், சானிடேசன் ஆகியவை வழங்க வேண்டும்.
ராமசாமி – காங்: கொரோனா பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதிக மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டுமென அரசே கூறி வருகிறது. ஆகவே சட்டசபையை கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டும். என்றார்.

அமைச்சர் சி.விஜயபாஸ்கர்: தமிழகத்தில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்தவர் தற்போது வீடு திரும்பி விட்டார், எல்லா விவரங்களை வெளிப்படையாக வெளியிட்டுள்ளோம். கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து 1 நாளுக்கு ஆய்வகத்தில் 100 பரிசோதனை செய்யலாம். தமிழகத்தில் 5 இடங்களில் பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 500 பேருக்கு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தனியார் ஆய்வகங்கள் விருப்பம் தெரிவித்துள்ளது. ஆனால் அதற்கு மத்திய அரசு தான் அனுமதி அளிக்க வேண்டும். அவர்களாக முன்வந்து சோதனை செய்பவர்கள்களுக்கு நேற்று 38 பேருக்கு ரத்த மாதி எடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு 200 முதல் 500 வரை தனிமைப்படுத்த மையங்களில் முக்கிய மாவட்டங்களில் உருவாக்கப்ப்டடுள்ளது. முககவசம், உபகரணங்கள் கூடுதலாக 60 கோடியை அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இதில் கூடுதலாக 25 லட்சம் முககவசம் தற்போது வாங்கப்பட்டு அவை வந்து கொண்டு இருக்கிறது. மேலும் மருத்து உபகரணங்கள், நோய் தடுப்பு மருந்துகள் தட்டுபாடு இல்லாத நிலை உருவாக்கியுள்ளோம், எல்லோரும் முககவசம் அணிய வேண்டியதில்லை தெரிவித்துள்ளோம்.

தமிழ 1,80,062 பேர் 2,200 கண்காணிப்பில் உள்ளனர். வெளிநாடுகளிலிருந்து வரக்கூடியவர்களை பரிசோதனை செய்து நேரடியாக மருத்துமனைக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். காய்ச்சல், இரும்மல், மூச்சுதிணறல் அறிகுறி, விமான நிலையங்களில் 2 மணி நேர சர்வதேச விமானநிலைத்தில் ஆய்வு செய்தோம். முழு அளவு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அறிகுறி இருந்தால் மருத்துமனைக்கும், அறிகுறி இல்லை என்றாலும் 14 நாட்கள் எப்படி இருக்க வேண்டும் எனும் அறிவுரை வழங்கப்படுகிறது. அண்டை மாநிலங்களில் செக்போஸ்ட் போட்டு, காவல்துறை, சுகாதாரத்துறை, வருவாய் துறை அதிகாரிகள் பணி மேற்கொண்டு வருகிறார்கள்.

49 ரயில்கள் வருகிறது இதனை எப்படி பரிசோதனை செய்யப்படுகிறது எனவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். தேவையான நிதி, வழிகாட்டுதல், அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் என்ன கோரிக்கை வைத்தீர்களே, அந்த கோரிக்கைகளை எல்லாம் உடனடியாக சட்டசபையில் செய்யப்பட்டுள்ளது. முதல்வர் தொடர் கண்காணிப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்.

82 நாடுகளுடன் வீடியோ கான்பிரன்சிஸ் நடைபெற்றது. இந்த வீடியோ கான்பிரன்சிஸ் முதல்வரும் இன்று காலை 9 மணியளவில் கலந்து கொண்டார். தேவையான நடவடிக்கைகளை எல்லாம் உரிய முறையில் எடுக்கப்பட்டு வருகிறது. ஆகவே எந்த அவசர நிலையிலும் தமிழகத்தில் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன்: பயமாக உள்ளது. வீட்டிற்கு சென்றால் அதிகம் நீங்கள் தான் வெளியே சென்று வருகிறீர்கள் என்கிறார்கள். எங்கே தனிமைப்படுத்தி விடுவார்களே என பயமாக உள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி: கொரோனை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தலைமை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அரசு துறை செயலாளர்கள் தலைமையில் அந்த துறை சார்ந்த குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவிடமிருந்து அறிக்கை பெறப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் அபாயகரமானதாக இருந்தாலும், அதனை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் அரசு மேற்கொண்டு வருகிறது.
சட்டசபையில் நான் உள்பட அனைத்து எம்எல்ஏக்கள், ஊழியர்கள் என அனைவரும் பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள். ஆகவே அச்சப்படதேவையில்லை. உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் சட்டசபையை ஒத்தி வைக்க வேண்டிய அவசியமில்லை என திமுக, காங்கிரஸ் வைத்த கோரிக்கையை முதல்வர் பதில் அளித்தார்.